தற்போது மக்களை ஏமாற்றி பலவித நூதன மோசடிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 7010424309 என்ற எண்ணிற்கு Google pay மூலம் குடிநீர் வரிகளைச் செலுத்த சொல்வதாக தரும் குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரிடமும் கூகுள் பே மூலம் வரி செலுத்த சொல்லவில்லை.
எனவே பொதுமக்கள் போலியான அவர்களிடம் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சென்னை குடிநீர் வாரியத்தின் வலைத்தளம் அல்லது சென்னை குடிநீர் வாரிய குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள URL இரைப்பு மூலம் கட்டணத்தை செலுத்தலாம். அல்லது அனைத்து பணிமனைகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வசூல் மையங்களில் உங்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.