சென்னையில் மின்சாதன பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய விதிமுறையை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்கள் மொபைல் பொருட்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், மிக குறைந்த அளவில் கிடைப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம், பிளாக் மார்க்கெட் என சொல்லப்படும் கள்ளச்சந்தை அங்கு அதிக அளவில் மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
இதன்மூலம், அரசால் அங்கீகரிக்கப்படாத சில பொருட்கள், சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெற்ற மின்சாதன பொருட்களை மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெறாத பொருட்களை விற்பனை செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.