500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் பட்சத்தில் அதற்கு தற்போது அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என கூறியுள்ளது. காந்தியின் படத்தில் இருந்து தள்ளி இருக்கும் பச்சை கோடு மற்றும் காந்தியின் படம் அருகே இருக்கும் பச்சை கோடு போடப்பட்ட நோட்டுகள் ஆகிய இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் எனவும் இது போன்ற போலி செய்திகளை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.