நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மாநில அளவில் கொரோனா தாக்கம் குறித்து அந்த மாநிலமே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது.
குறிப்பாக மத்திய அரசு… யோகா, உடற்பயிற்சி கூடம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு முழு முடக்கம் பிறப்பித்து இருக்கின்றது. இதற்க்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்பது போன்ற உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது. இதே போன்று ஏராளமான விஷயங்களை மாநில அளவிலான பாதிப்புக்கு ஏற்று அரசாங்கம் அறிவித்து வருகிறது.
இன்று முதல் மத்திய, மாநில அரசு அறிவித்த பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு 144 உத்தரவு தொடரும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை தொடரும் என தெரிவித்துள்ளார். அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.