ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்குஅம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கின்றது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்திருக்கிறது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் நாட்டின் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 34 வயதான பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும் அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என கூறப்பட்டுள்ளது.