இன்றைய காலத்தில் பான்கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டது. இது இன்றி எந்த நிதிபரிவர்த்தனையும் நடக்காது. நிதி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும், வங்கிகணக்கு தொடங்குவதற்கும் பான்கார்டு அவசியமான ஒன்று. வங்கி முதல் அலுவலகம் வரை அது இன்றி எந்த நிதிப்பணியையும் செய்ய இயலாது. எனினும் பான்கார்டு குறித்த தவறு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதாவது நீங்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால், அபராதம் தொகை செலுத்தவேண்டும். மேலும் உங்கள் வங்கிக்கணக்கும் முடக்கபடலாம். அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தவேண்டி இருக்கும்.
ஆகவே உங்களிடம் 2 பான்கார்டுகள் இருந்தால், உடனே உங்களது 2வது பான்கார்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வருமான வரிச்சட்டம் 1961-ன் பிரிவு 272B-ல் இதற்கான ஏற்பாடு இருக்கிறது. ஆகையால் பான்கார்டை எவ்வாறு ஒப்படைக்கலாம் என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வோம். இவற்றிற்கு ஒரு பொதுவான படிவம் இருக்கிறது. அதனை நீங்கள் நிரப்பவேண்டும். இதற்கு நீங்கள் வருமானவரி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
தற்போது புது பான்கார்டு (அல்லது) பான்டேட்டாவில் மாற்றங்கள் (அல்லது) திருத்தத்துக்கான கோரிக்கை எனும் இணைப்பினைக் கிளிக் செய்யவேண்டும். அங்கு இருந்து படிவத்தை பதிவிறக்கவும். அந்த படிவத்தை பூர்த்திசெய்த பின், ஏதேனும் NSDL அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கவும். 2வது பான்கார்டை சமர்ப்பிக்கையில், அதனைப் படிவத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இதனை ஆன்லைனிலும் செய்து முடிக்கலாம்.