அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெகு சிலருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் வெகு சிலருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி குறித்து முக்கிய முடிவு எடுக்க ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது. இது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.