Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் ரூ.56,000 கொள்ளை…. பெரும் அதிர்ச்சி…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் தெரியாததால் அந்த வழியாக சென்ற இளைஞரை அழைத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் உதவுவது போல அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து கலைச்செல்வியின் செல்போனுக்கு தங்களது வங்கி கணக்கில் இருந்து 56 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை கண்டு பதறிப் போன கலைச்செல்வி உடனே காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் எந்தெந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து உள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கத் தெரியாவிட்டால் உறவினர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரியாத நபர்களிடம் இது போன்று யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |