Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஏடிஎம் மையங்களில் பரவும் கொரோனா?…. கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றுப்பரவலிலிருந்து தப்பிக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், பெரும்பாலான தனியார் வங்கிகள், ஏடிஎம் மையங்களின் மூலமே பணத்தை செலுத்துவது, எடுப்பது போன்ற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. தினமும், ஏராளமானோர், வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், ஏடிஎம் மையங்கில் சானிடைசர் வைக்கப்படுவதில்லை. பலரும் கைகளைச் சுத்தம் செய்யமலேயே ஏ. டி. எம் உபகரணங்களைக் கையாள்வதால், தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வங்கி நிர்வாகத்தினர், அவரவர் ஏடிஎம் மையங்களில் சானிடைசர் உள்ளிட்ட தொற்றுப்பரவல் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |