Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையின் கீழ் பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழைய வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய வங்கிக்கு மாறுகிறார்கள்.. எனவே பழைய வங்கிகளின் காசோலை, பாஸ்புக், ஐ.எஃப்.எஸ்.சி கோடு ஆகியவை வரும் ஏப்ரல் 1 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பின் படி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடனும், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல் யுனைடட் பேங்க் ஆப்ஃப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகியவற்றை இந்தியன் வங்கியுடனும் மத்திய அரசு இணைத்துள்ளது..

இதனால் இந்த 8 பொதுத்துறை வங்கிகள் 3 வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி, யுனைடட் பேங்க் ஆப்ஃப் இந்தியா, அலகாபாத் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் காசோல மற்றும் பாஸ்புக் ஆகியவை ஏப்ரல் 1 முதல் செல்லாது. இதில் சிண்டிகேட் பேங்க் மற்றும் கனரா பேங்க் வாடிக்கையாளர்கள் மட்டும் ஜூன் 30 வரையில் பழைய காசோலைப் புத்தகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் புதிய காசோலைப் புத்தகம் மாற்றியாக வேண்டும்.

அதனால் நீங்கள் இந்த வங்கிகளில் வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் மொபைல் எண், முகவரி, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர் போன்ற விவரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். உங்கள் பழைய வங்கியுடன் இணைக்கப்பட்ட புதிய வங்கியில் இருந்து புதிய காசோலை மற்றும் பாஸ் புக் பெற வேண்டும். புதிய காசோலை புத்தகம் மற்றும் பாஸ் புக் கிடைத்த பிறகு, பல்வேறு நிதி கருவிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் வங்கி விவரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக, வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கு, ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு, கிளை முகவரி, காசோலை, பாஸ்புக் ஆகியவற்றை மாற்ற வேண்டும். மேலும் தங்களுமைய மொபைல் எண், முகவரி, நாமினி விவரங்களையும் வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, ​​வங்கி உங்களுக்கு ஒரு காசோலை புத்தகத்தைத் தருகிறது. இந்த காசோலை புத்தகத்தின் உதவியுடன், வாடிக்கையாளர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்யலாம். எனவே, கணக்கு வைத்திருப்பவர்கள் கடைசி தேதிக்கு முன்னர் புதிய பாஸ் புக் மற்றும் காசோலை புத்தகத்தை வங்கியில் இருந்து பெற வேண்டும்.

Categories

Tech |