Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஒமைக்ரான் தொற்று பாதித்தால்…. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை….!!

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு மாற்றங்களை அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில்  கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கொரோனா போன்று ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு லேசான பாதிப்பு கொண்டது அல்ல என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ரவீந்திர குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது, ஒமைக்ரான் வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது போன்று எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால் சார்ஸ் வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் ஒருபோதும் மென்மையானதாக மாறப்போவதில்லை. எனவே உருமாறிய ஒமைக்ரான் வேகமாகப் பரவினாலும் லேசான பாதிப்பு கொண்டது கிடையாது. இப்போது வேண்டுமானால் பாதிப்பு குறைந்தது போன்று தெரியும். ஆனால் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது. இது நுரையீரல் செல்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்ற வாய்ப்புள்ளது. இந்த புதிய வகை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இருப்பினும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |