தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இலவசமாக ஒமைக்ரான் பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஒமைக்ரான் பரவலை பயன்படுத்தி இணையதள குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் போல் போலியாக இணையதளம் உருவாக்கி இமெயில் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு ஒமைக்ரான் கண்டறிய இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று விளம்பரங்கள் வெளியிடுவார்கள். இதனை நம்பி இமெயில் இருக்கும் இணையதள முகவரிக்குள் நுழைவுபவர்களின் அவர்களின் வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.