ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 796 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2 ஆவது அலை மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டு வருகிறது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளன்று 796 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.