ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பலவிதமான கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதனை தடுக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொது மக்களிடையே ஏற்படுத்தியது.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொற்றின் 2 ஆவது அலையின் பரவல் மிகவும் வேகமாக இருக்கிறது. அந்த வகையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.