ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியையும், முக கவசம் அணிதலையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளன்று 305 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.