ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 371 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனானுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 371 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 1,425 நபர்கள் அரசு மருத்துவமனையிலும், 819 நபர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.