Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!…. கனடாவில் பரவும் “ஜாம்பி” நோய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

“ஜாம்பி” என்ற வகை நோய் பற்றி ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். ஜாம்பி நோய் ஒவ்வொரு மனிதராக பரவி பேய் பிடித்தவர்கள் போல அவர்களை நடந்து கொள்ள வைக்கும். சமீபத்தில் இப்படியான ஒரு வியாதி பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனடாவில் Chronic Wasting Disease (CWD) என்ற நோய் மான்களுக்கு இடையே பரவி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாஸ்கட்ச்வான், அல்பெர்டா உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. மிளா போன், மான் என அனைத்து வகை மான் இனங்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. முதன்முதலில் இந்த நோய் அமெரிக்காவில் 1960-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் 26 மாகாணங்களிலும் இந்த நோய் பரவியது. தற்போது இந்த நோய் கனடாவில் பரவி வருகிறது.

ஆபத்து :-

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை அடித்து சமைத்து உண்ணுவதன் மூலம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மனித ரத்தத்துடன் இந்த நோய்க்கிருமிகள் கலந்துவிட்டால் மனித உடலுக்குள் நோய் பரவ ஆரம்பித்துவிடுமாம். அதோடு மட்டுமில்லாமல் இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாண்டால் கூட மனித உடலுக்குள் அந்த கிருமிகள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு பாதிப்பு :-

மனித உடலுக்குள் இந்த நோய் சென்றால் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் ? என்பதற்கான அறிவியல் ரீதியான ஆய்வுகள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த நோயிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாடாமல் இருந்தால் நல்லது. அதேபோல் ரப்பர் கிளவுஸ்களை அணிந்து விலங்குகளை வெட்டுதல் நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஜாம்பி :-

மிருகங்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் போது அவற்றிற்கு வழக்கத்தை விட வாயில் அதிகமாக எச்சில் வடிதல், வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை, மற்ற மிருகங்களுடன் சேராமல் இருப்பது, உடல் எடை குறைவது, அதிகமாக நீர் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படுமாம். இதுபோன்று மனிதர்களுக்கு நடந்தால் அவர்களும் ஜாம்பிகளாக மாற வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |