Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்…! ”காஃபி குடித்தால் முகப்பரு வரும்” இதை தெரிஞ்சுக்கோங்க …!!

நமது உடல் முழுவதும் ஈரத்தன்மை உடையது. உடலில் ஈரத்தன்மை குறையும்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டினாலும் முகப்பரு வரும். காஃபி அதிகமாக குடிக்கும் பொழுது முகப்பரு ஏற்படும்.

முகப்பரு இல்லாமல் அழகான மென்மையான முகத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இந்த காலகட்டத்தில் மக்களின் சுற்றுச்சூழல், வாகனங்களின் புகை, வெப்பம் போன்றவை இவர்களின் முக அழகை மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருகிறது. முகப்பரு வருவதற்கு உணவுப் பழக்கமும் இன்னொரு காரணமாக உள்ளது.

முகப்பருவிற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்க வழக்கம்.

பொரித்த உணவுகள், பால் பொருட்கள், பிரட், கோழி இறைச்சி, காரசார உணவுகள் போன்ற பல்வேறு வகையான உணவுகளை உண்பதால் முகப்பரு ஏற்படும் அபாயம் உள்ளது. முகப்பருவிற்கு காரணம் நீங்கள் குடிக்கும் காஃபி என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியமாவீர்கள் தானே? ஆம் உண்மைதான். அதிகமாக காஃபி உட்கொள்வதால் முகப்பரு வருவதற்கு மிகவும் வாய்ப்புள்ளது. ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின் பெரும்பான்மையான அடிப்படை காரணியாக உள்ளது.

பாலிதீன் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சர்க்கரை, உணவுகள், மிட்டாய்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்ற உணவுகளை தவிர்த்தல் வேண்டும். சுகாதாரமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது என்கிறார். ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சில்பா அரோரா ND. நீங்கள் பருகும் காஃபியின் அளவை குறைத்துக்கொள்வதால் தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்கலாம். ஹார்மோன்களின் மன அழுத்தத்தைத் தூண்டி விடும் வேதிப்பொருட்கள் காபியில் உள்ளன.

உடலில் தேவையற்ற கலோரிகள் சேரவும் முகப்பரு ஏற்படவும் இது வழிவகுக்கிறது.
காஃபின் அளவை குறையுங்க, முகப்பரு வராமல் தடுங்க.

நிறைய தண்ணீர் உட்கொள்வதால் நமது தோலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று நாம் அனைவரும் அறிந்ததே! உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். காபி அருந்துவதால் விரைவில் சிறுநீர் வெளியேறும். அடிக்கடி காஃபி அருந்துவதால் அடிக்கடி சிறுநீரும் வெளியேறும் அதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகிறது. இதனால் உடல் சூடு ஏற்படும். இதன் காரணமாக முகப்பரு வருவதற்கு வழிவகுக்கிறது என்கிறார் Dr. ரூபாலி தத்தா. நாம் அருந்தும் காஃபி தானே என்று அலட்சியம் செய்யாமல் அளவோடு அருந்தினால் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம்.

Categories

Tech |