Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காதில் ஹெட்செட்…. சிறிய கவனக்குறைவால் ஐடி ஊழியர் பரிதாப மரணம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார்.

அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறிய கவனக்குறைவால் இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |