Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான  வெளிநாட்டு குளிர்பான பாட்டில்கள் காலாவதியாகி இருந்துள்ளது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்களின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |