Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… குரங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம்… WHO கருத்து…!!!!!!!

குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய் பற்றி உலக சுகாதார அமைப்பின்  ஐரோப்பாவிற்கான  பிராந்திய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குரங்கு காய்ச்சல் கொரோனா  பரவிய அதே பாணியில் பரவரவில்லை. எனவே கொரோனா ஒழிப்பிற்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டும் என  அவசியமில்லை. இருந்தபோதிலும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கின்றது.

இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதுவே சந்தேகமாக இருக்கிறது. அதற்கு தொற்று பரிவர்த்தனைகளை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். இனி வரும் மாதங்களில் பண்டிகைகள் வருவதால் குரங்கு காய்ச்சல் அதிகரிக்க கூடலாம். அதேநேரத்தில் உலகளாவிய விழிப்புணர்வு அதிகரிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |