கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு புதுவித ஆபத்து ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடனே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவில் கொரோனாவால் புதிய ஆபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி, இருதய பிரச்சனைகள், ரத்தக்கட்டு மற்றும் ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி தீவிர ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நரம்பியல், இருதவியல், கிட்னி மற்றும் வயதானவர்களுக்கான நோயியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இரண்டு வாரங்களில் 20 சதவீதம் பேருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு, அதன் பிறகு சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது. மேலும் பல சிக்கல்களும் உருவாகியுள்ளது. இந்த ஆய்வில் வெளியான தகவல்கள் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.