Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா பரவ… யார் காரணம் தெரியுமா?… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா பரவுவது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாருக்கும் வைரஸை பரப்ப வில்லை என்றும், 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்பி இருப்பதாக கூறியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமவயது உள்ளவர்களுக்கு அதிக அளவு கொரோனா வைரஸை பரப்பி இருப்பதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 45 சதவீதம் பேர் நீரிழிவு நோய் உடையவர்கள்.அதே சமயத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் கொரோனா அதிகம் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த இரு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்கள் ஐந்து நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |