தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது.
இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் கோவை மாநகர மாவட்ட செயலாளராக இருந்தவர் அவர் அம்மன் அருச்சுனன். இவர் ஏற்கனவே கோவை தெற்கு பகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இதையடுத்து இவருக்கு தற்போது கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அர்ஜுனன் தனது தொண்டர்களுடன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதிமுக அரசின் சாதனையை சொல்லி, மீண்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற வலியுறுத்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் அர்ஜுன் ஈடுபட்டு வருகின்றார்.
வேட்பாளர் அர்ஜுனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருவதாகவும், வெற்றி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டு விட்டது எனவும் அதிமுக நிர்வாகிகள் செம குஷியில் இருக்கின்றார்கள்.