Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சென்னையில் கொரோனா 2ஆம் அலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சென்னை புறநகரில் கொரோனா இரண்டாவது அலை அதிகம் தாக்க தொடங்கி இருப்பதை சுகாதார செயலாளர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை புறநகரில் கொரோனா இரண்டாவது அலை அதிகம் தாக்க தொடங்கி இருப்பதை சுகாதார செயலாளர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை குரோனா இரண்டாவது அலை பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |