Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடி ஆகவும், தற்போது  ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாகவும் உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் நீர் வரத்தால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமானது 24 அடி ஆகும். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 20 அடிக்கு மேல் நீர்மட்டம் இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

Categories

Tech |