Categories
பல்சுவை

மக்களே உஷார்!…. செல்போனுக்கு வரும் மெசேஜ்…. தயவுசெஞ்சு ஏமாந்துறாதீங்க….!!!!

வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக வாட்ஸ்அப்பில் பலருக்கும் தபால் துறை அனுப்புவது போலவே தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரிசு பொருள்கள் மற்றும் மானியம் தபால் துறை வாயிலாக வழங்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறி மோசடி செய்து வருகின்றனர். செல்போனுக்கு குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி அதனை பயன்படுத்துமாறும் கூறுகின்றனர். இவ்வாறு அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை நீங்கள் தொடும்போது உங்களுடைய செல்போன் எண், வங்கி கணக்கு மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலியாக வரும் தகவல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும், தபால் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தபால் துறையும் இதுபோன்ற போலி தகவல்களை தடைசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பரிசு பொருள்கள், மானியம் வழங்குவதற்காக தபால்துறை பெயரில் செல்போனுக்கு வரும் மெசேஜில் உங்களுடைய சுய விவரங்களை பதிவு செய்து ஏமாந்து விடாதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |