Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. டவர் அமைக்க இடம்…. யாரும் இதை நம்பாதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!!

மொபைல் டவர் அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகை தகவல் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரை கூறி, 4ஜி, 5ஜி மொபைல் டவர் அமைப்பதற்கு எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் உங்களுக்கு பல லட்சம் ரூபாய் முன்பணமும், மாத வாடகையும் தருவதாக யாராவது தொடர்புகொண்டு கூறலாம்.

அதன்பிறகு பட்டா எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் அனைத்தையும் பெற்று, அரசு வழங்க வேண்டிய கட்டணம் மற்றும் வரி செலுத்த வேண்டுமென்று கூறி உங்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வரை பலம் பெறுவார்கள். அதன் பிறகு அவர்களை உங்களால் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம்.

இதுவரை ஒரு சிலர் இதுபோன்று பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். அதனால் இது போன்ற போலியான அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் ஏதாவது உங்களுக்கு வந்தால் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |