Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… தடுப்பூசி போட்ட பிறகு தப்பி தவறி கூட இதை தொடாதீங்க… மிகவும் ஆபத்து…!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தடுப்பூசி போட்ட பிறகு ஆன்டிபாடிகள் உருவாக மூன்று வாரங்கள் ஆகும். எனவே அந்த சமயத்தில் மது குடித்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எதிர்ப்பு சக்தி உருவாக அதிக நேரம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மது அருந்தாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்யும். இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்ட பிறகு கட்டாயம் மதுவைத் தொடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |