கொரோனா இன்னும் முடியவில்லை தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்து விட்டதாக நாங்கள் கூறவில்லை. தற்போது தொற்று பரவல் நின்றிருக்கலாம். ஆனால் அது மீண்டும் எப்போது பரவும் என்பது நமக்கு தெரியாது. கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகின்றது.
இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கைவிட கூடாது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. உங்களின் ஆதரவுடன் இது சாத்தியமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.