Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… தமிழகத்தில் தொடரும் மோசடி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர்  கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். இதனிடையில் இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில் டேவிட்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் வாயிலாக தகவல் கொடுத்தார். இதை நம்பி டேவிட்பாலை தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார்.

அதன்படி தமிழகம் முழுதும் 44 பேரிடம் ரூபாய் 1 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரத்து 399 பெற்று மோசடி செய்தார். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சகாயராஜ் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு டேவிட் பாலை கைது செய்தனர். மேலும் டேவிட் பால் பயன்படுத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் டேவிட் பால் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ஏராளமான சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையில் ஒவ்வொருவரிடம் மோசடி செய்யும் போதும் ஒவ்வொரு சிம்கார்டுகளை பயன்படுத்துவார். வீட்டு அருகில் வந்தவுடன் வேறொரு சிம்கார்டை பயன்படுத்துவார். இவ்வாறு நீண்ட காலம் மோசடிசெய்த டேவிட் பாலை காவல்துறையினர் துடியலூர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |