Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்தில் வந்தது அடுத்த ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தற்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் மக்கள் இன்னும் கொரோனா அச்சத்தில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொசு பரவுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து டெங்கு காய்ச்சல் அதிகம் தாக்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |