Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த ஐந்து நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |