இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று பாதிப்பு அண்டை நாடான சீனாவிலிருந்து பரவ தொடங்கியது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இறந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதுவரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா நம் வாழ்வோடு ஒன்றியது என்றும் இனி கொரோனாவுடன் வாழ பழகிகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைக்கு உருமாற்றமடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,671 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465, திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 34,98,992ஆக அதிகரித்து இருக்கிறது.
இதனிடையில் நேற்று ஒரேநாளில் 2,516 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரையிலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆகவும் இருக்கிறது. தற்போது 18,687 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இப்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது 4ஆம் அலை தாக்கம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.