Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த ஐந்து நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது இயல்பை விட மூன்றில் இருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். அதனால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |