Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. தவறுதலாக விஷக் காளான் சாப்பிட்ட 13 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

அசாம் மாநிலத்தில் விஷக் காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 9 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் சீசன் என்பதால் அங்கு காலால் விளைந்துள்ளது. அதனைப் பறித்து வீட்டிற்கு எடுத்துச் சென்ற சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அதில் 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் காடுகளில் இருந்து பறிக்கும் காளான்களை உண்ணக்கூடிய காளான்கள் என்று தவறாக நினைக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க காளான்களை உட்கொள்வது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |