Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! நாளை, நாளை மறுநாள் கனமழை…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை குமரி, நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நாளை மறுநாள் சேலம் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |