மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னை மாதவரம் பால்பண்ணை சாலை புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான அளவிற்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.