படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் தீவிரமாக பரவி உள்ளது.
படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் வெடித்து பிடித்த தீயானது வீட்டையே நாசம் செய்துள்ளது. சமீபத்தில்தான் rebeecaவின் மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக joenna பெரும் செலவை சந்தித்துள்ளார். தற்போது வீடு எரிந்து போனதால் அவர்களது உடைமை முழுவதும் இழந்துள்ளனர். எனவே joennaவின் குடும்பம் தற்போது பொதுமக்களின் உதவியை நாடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தங்கள் வீட்டில் குடியேற இன்னும் 9 மாத காலம் வரை ஆகலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.