நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.மேலும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே டெல்லியில் தான் காற்று மாசு அதிகம் உள்ளது. இந்த மாசை தடுக்க பட்டாசுகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது