குஜராத் மாநிலத்தில் வாலிபருக்கு தோஷம் கழிப்பதாக கூறி 97 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதன்படி குஜராத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 52 வயது ஆகியும் தனது திருமணம் நடைபெறுவததால் மதன்குமார் என்பவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேட்ரிமோனியில் பதிவு செய்த அவரின் விவரங்களை அறிந்து கொண்ட ஒரு நபர் தன்னை ராம ஜென்ம பூமியில் ஜோதிடர் எனவும், உங்களுக்கு தோஷத்தை கழிக்க வேண்டும், அவ்வாறு தோஷம் கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெறும் எனக் கூறி 97 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார்.
அதன்பிறகு மூன்று வருடங்களாகியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் தானே மாறுவதை உணர்ந்த அவர், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்தாவது மக்கள் இனிமேல் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.