பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய கௌதமி அந்த நபர் கூறிய வங்கி கணக்கு 58 ஆயிரத்து 982 ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கௌதமி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.