Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!! பரிசு பொருட்கள் தருவதாக கூறி…. பெயிண்டரிடம் ரூ.8 1/4 லட்சம் மோசடி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி புதூரில் பெயிண்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது whatsapp எண்ணிற்கு ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பேசி அந்த நபர் குமாருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் உங்களது பிறந்தநாளுக்கு லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்புவதாக அந்த நபர் குமாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுங்க கட்டணம், வெளிநாட்டு கரன்சி மாற்று கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து whatsapp-பில் வந்த 2  செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு வெளிநாட்டு கரன்சி மாற்று கட்டணம், சுங்க கட்டணம் குறித்த விவரங்களை குமார் கேட்டுக் கொண்டு சில வங்கி கணக்குகளுக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபர்கள் குமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டனர். இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்தகுமார் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |