பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சிலர் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் லோகோ ஆகியவற்றை பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலமாக சிலர் தவறாக பயன்படுத்துவது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு தற்போது வந்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இருக்க மக்கள் கமிஷன் அல்லது வரை கேட்கிறார்கள். இது போன்ற எந்த நடவடிக்கையிலும் ரிசர்வ் வங்கி ஈடுபடவில்லை எனவும் யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதையும் ரிசர்வ் வங்கி கேட்காது.
அதே நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கும் எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களை ரிசர்வ் வங்கி கையாளுவது இல்லை எனவும் யாரிடமும் அத்தகைய கட்டணத்தையோ கமிஷனையோ கேட்பதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.