சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக அந்த நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற நாடுகளில் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் சீனாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா கட்டுப்பாடுகளால் சீன மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 949 என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோன பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
ஆனால் சமீபத்தில் தென்மேற்கு நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் கடந்த ஐந்தாம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனர் ஒருவர் அந்த நாட்டின் வெய்போ சமூக ஊடகத்தில் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளும் மற்றும் சிறுகடைகளும் மூடப்பட்டிருக்கிறது. எங்களால் மளிகை பொருட்களை கூட வாங்க முடியவில்லை. மேலும் ஆன்லைன் வழியே ஷாப்பிங் செய்யக்கூடிய அரசு அங்கீகரிக்கப்பட்ட தலங்களிலும் மளிகை பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் உணவுப் பொருட்களை வாங்க முடியாது அல்லது வீடுகளுக்கு வந்து விநியோகம் செய்வதனையும் பெற முடியாது என வேதனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடுமையான கொரோனா கொள்கைகளால் பீஜிங் போன்ற நகரங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொரோனா தொற்று எல்லாம் முடிவுகளைப் பெறும் குடியிருப்பு வாசிகள், உணவு, விடுதிகள், கட்டிடங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுகின்றார்கள் எனவும் தீவாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதனால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்ற சீன மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மருந்து வசதிகள் போன்றவற்றை கூட பெற முடியாமல் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.