சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெரும் பாகத்தை சேர்ந்த சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் சமையலறையில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. பின்னர் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதுபோன்ற உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் சமைக்க படுவது மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.