Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! பிளீஸ் யாரும் நம்பாதீங்க….. பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்ற பெயரில் பலரும் பல்வேறு விதமாக ஏமாற்றி வருகிறார்கள் குறிப்பாக ஆன்லைன் மூலமாக மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடி நபர்கள் ஒவ்வொரு மோசடியையும் வெவ்வேறு பாணியில் முன்வைக்கிறார்கள். எனவே மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும். இதுகுறித்து காவல்துறையினர் சார்பாகவும் வங்கிகள் சார்பாகவும் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது . செல்போன்களில் வரும் லிங்கை மக்கள் தேவை இல்லாமல் தொடக்கூடாது. மேலும் பரிசு பெற்ற எஸ்எம்எஸ் களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அமேசான் கிப்ட் கார்டுகள்’ என டிஜிபி சைலேந்திர பாபு பெயரில் வரும் போலி எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செல்போன் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்பில் வரும் லிங்க்குகளை தேவையின்றி மக்கள் தொடக்கூடாது. அப்படி தொட்டால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும். மேலும் பரிசு வென்றுள்ளதாக வரும் எஸ்எம்எஸ்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |