Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. புதுவித மோசடி…. யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் வங்கி சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் பயன்பாடும் புதிய டிஜிட்டல் வசதிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் புதுப்புது மோசடிகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் புதிய வழியில் நடைபெறும் வங்கி மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சில மோசடி கும்பல் பொதுமக்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அவர்களின் நண்பர்களிடம் பணம் கேட்டு கோரிக்கை விடுப்பதாகவும்,மிகவும் அவசரம் என்ற பெயரில் பணம் பெற்று மோசடி செய்து வருவதாகவும் ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்படி அவசரமான சூழலில் யார் என்ன என்பதை பார்க்காமல் தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்தாமல் கூட பணம் அனுப்பி விடுகிறோம். இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன. எனவே நண்பர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக பணம் அனுப்பும்படி கேட்டால் மொபைலில் அழைத்து நிலைமையை உறுதி செய்த பிறகு பணத்தை அனுப்புங்கள் என்று பொதுமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி எச்சரித்துள்ளது.

Categories

Tech |