பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை விநியோகம் செய்த வேண்டும் என்பதற்காக கேந்திரிய பந்தா என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியது.
இந்நிலையில் தேசிய வேளாண் பொருள் விற்பனை கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு விநியோகம் செய்ய பருப்பை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிடங்குகளில் பருப்பின் மாதிரிகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மத்திய மாநில அரசுகள் 2 வாரங்களில் இந்த மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.