Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. ரூ.24 லட்சத்தை இழந்த வியாபாரிகள்…. பரபரப்பு….!!!!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது.

அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் சாலையிலுள்ள நகைகடையில் எங்களிடம் இருந்த தங்ககட்டிகளை கொடுத்துவிட்டு, அதற்கு பதில் ரூபாய்.24 லட்சம் வாங்கி வருவதாக கூறினர். எனினும் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அதன்பின் அப்பணத்தை பறிமுதல் செய்த மர்ம நபர்கள், போலீஸ் நிலையம் வந்து உரிய ஆவணங்களை காட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்லும்படி கூறிவிட்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து பஷீர்அகமது, காஜா மொய்தீன் இருவரும் பூக்கடை காவல் நிலையம் சென்று நடந்த விபரங்களை கூறி பணத்தை தரும்படி கேட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அது போன்று யாரும் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்யவில்லை என கூறினர். ஆகவே மர்ம நபர்கள் போலீஸ் போல் நடித்து தங்களிடமிருந்த ரூபாய்.24 லட்சத்தை நூதனமுறையில் பறித்துச் சென்றதை இருவரும் உணர்ந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |